என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறியியல் படிப்பு"
தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக 43 இடங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக செயல்படும் இந்த மையங்களில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சென்று விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் இயக்குனர் தலைமையில் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாட்கள், நேரம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திட்டமிட்டு வருகிறார்கள்.
மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கல்லூரிகள் பாடப்பிரிவுகளை தெரிவு செய்யவும், ஒதுக்கீட்டு ஆணை வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் புருஷோத்தமன் கூறியதாவது:-
நேற்று வரை 61,723 பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாக ரேண்டம் எண் வழங்கப்படும். 43 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையங்களை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அந்தந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சென்னையில் தான் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவின் ஒதுக்கீடு பெற விரும்புபவர்கள் கட்டாயம் சென்னைக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #AnnaUniversity
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிசி, எம்.பி.சி, பிசி முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும். #EngineeringAdmission #QualifyingMarks
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும் இக்கலந்தாய்வில் இதுவரை மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் 36,126 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
125 முதல் 149 வரை தகுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான ஒதுக்கீடு நாளை மாலை அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 18,000 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் முதல் 17ஆம் தேதி மாலை வரை நடைபெற இருக்கிறது.
முதல் மூன்று கட்ட கலந்தாய்வில் 36,126 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்லூரியிலும் அனைத்து இடங்களும் நிரம்பவில்லை. மொத்தம் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வில் 71 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட கலந்தாய்வு மூலம் சேரவில்லை.
அதுமட்டுமின்றி, 214 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இது கடந்த காலங்களில் இல்லாத மிக மோசமான நிலைமை ஆகும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் கூட பெரிய அதிசயங்கள் எதுவும் நடந்து விடும் என்று தோன்றவில்லை. ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு 60,000 முதல் 65,000 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படக்கூடும். இதிலும் எவ்வளவு பேர் சேருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களே தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 1.76 லட்சம் இடங்கள் நடப்பாண்டில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். இந்த இடங்களுக்காக மொத்தம் 1,59,632 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1,04,000 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்களிலும் அதிகபட்சமாக 65,000 மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படஉள்ளன.
அதாவது மொத்தமுள்ள இடங்களில் 36.90 சதவீதம் இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படஉள்ளன. தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் பலருக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவும் நிலையில், பொறியியல் படிப்புக்கு உள்ள இடங்களில் மூன்றில் இரு பங்கு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கக்கூடும் என்றால் பொறியியல் படிப்பு எந்த அளவுக்கு மதிப்பிழந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் லட்சியப் படிப்பாக திகழ்ந்த பொறியியல், இப்போது வேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பு சீரழிந்ததற்கு காரணம் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப் படாதது தான். கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை வேண்டுமானால் பல பத்தாண்டுகளாக மாற்றிய மைக்காமல் இருக்கலாம். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நிமிடத் திற்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக பொறியியலைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் அடுத்த 5 ஆண்டு களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே யூகித்து, அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்போது தான் பொறியியல் படிப்புக்கு மரியாதை கிடைக்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக் கான அண்ணா பல்கலைக் கழகத் திற்கு பல ஆண்டுகளாக துணை வேந்தர்களையே நியமிக்காத அரசு தான் தமிழகத்தில் உள்ளது. துணைவேந்தரையே நியமிக் காத அரசு, பாடத் திட்டத்தை சிறப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்ப்பவர்கள் முட்டாள் களின் சொர்க்கத்தில் வசிப்ப வர்களாகத் தான் இருப்பார்கள். இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி) மற்றும் சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாடத் திட்டத்துடன் ஒப்பிடும் போது அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மிகவும் தரமற்றதாக உள்ளது. இந்த நிலையை மாற்றி பொறியியல் படிப்பை போட்டி நிறைந்ததாக மாற்றுவதற்காக அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; அத்துடன் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு பருவத்திற்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் ஐ.ஐ.டிக்கு இணையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தையும், ஐ.ஐ.எஸ்சிக்கு இணையான அறிவியல் கல்வி நிறுவனத் தையும் உலகின் தரமான பேராசிரியர்களைக் கொண்டு தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவற்றின் வழிகாட்டுதலில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளை நாட்டின் முன்னணி கல்வி நிறு வனங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். #ramadoss #engineeringstudies
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்